ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு

வட ஆபிரிக்க நாடான Morocco வில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Rayan என அழைக்கப்படும் 5 வயது சிறுவன் ஒருவன் 104 அடி ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  குறித்த சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில்  Morocco நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!