பயங்கரவாத திருத்தச் சட்டமூலம்- நீதியமைச்சர் சமர்ப்பிக்காதது ஏன்? February 11, 2022 7:48 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று வெளிவிவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.மேலும் இந்த சட்ட மூலமானது நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றபோதிலும் வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், இதன்மூலம் இந்த சட்டம் குறித்து அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என்பது புலனாகிறது எனவும் குற்றம் சுமத்தினார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…