எதிர்கால ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள்!

எதிர்காலத்தில் அமைய உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.
    
தற்போதைய அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகளை தண்டிப்பதில் தவறியுள்ளது. புதிய அரசாங்கமொன்றால் மாத்திரமே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என கர்டினல் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

இதேவேளை தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யாரென கண்டறிந்து அவர்களை நீதிமன்றத்தின் முன்நிறுத்துவது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாக்குதலின் சூத்திரதாரியைகூட அரசாங்கத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களது அரசாங்கத்தில் இவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முக்கியத்துவமளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!