
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:20 மணியளவில், m60 பகுதியில் அதிவேகமாக ஒருவர் வாகனம் ஓட்டி செல்வதை கண்ட காவல் அதிகாரி அந்த காரை ஸ்டோக்போர்ட் சாலையில் மடக்கி பிடிக்க முயன்றுள்ளார்.
இந்தநிலையில் அந்த சொகுசுகார் கிங்ஸ்வே மற்றும் விளம்ஸ்லோவ் சாலை சந்திப்பை நோக்கி அதிவேகமாக சென்ற கொண்டிருந்தபோது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 71 வயது மூதாட்டி மற்றும் 64 வயது முதியவர் ஆகிய இருவரின் மீதும் மோதியது.
இந்த விபத்து சம்பவத்தில் 71 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 64 வயது முதியவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
இந்த விபத்துக்கு காரணமாக இருந்த நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் வைத்து இருப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!