உக்ரைனின் தலைசிறந்த படைப்பை எரித்து நாசமாக்கியது ரஷ்யா!

உக்ரைனில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை ரஷ்யா படை எரித்து நாசமாக்கியது. உலகிலேயே மிகப் பெரிய விமானம் நேற்று ரஷ்ய துருப்புக்களால் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள விமானநிலையத்தில் போரிட்டு அழிக்கப்பட்டது என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறினார்.
    
ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்து தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர் தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்யா ஷேல் தாக்குதல் நடத்தியது.

அப்போது, அங்கிருந்த AN-225 ‘Mriya’ என்ற மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானத்தை எரித்து நாசமாக்கியது.

உக்ரேனிய மொழியில் Mriya என்றால் ‘கனவு’ என்று பொருள்படும். உக்ரேனிய வானூர்தி நிறுவனமான அன்டோனோவ் தயாரித்த இந்த விமானம், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக தகுதியை பெற்றது.

இது குறித்து உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “உலகின் மிகப்பெரிய விமானமான “மிரியா” (கனவு) ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் கிய்வ் அருகே உள்ள விமானநிலையத்தில் அழிக்கப்பட்டது. நாங்கள் விமானத்தை மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற எங்கள் கனவை நிறைவேற்றுவோம்” என்று பதிவுசெய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!