அரசாங்கத்தை கவிழ்க்குமாறு பொதுமக்கள் கோருகின்றனர்!

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்குமாறு பொதுமக்கள் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை அடுத்த மாதம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
    
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் தேர்தலை நடத்தாது எனவும் அரசாங்கத்துக்கு எதிராக நிற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்றார்.

தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால் மாற்றுத் தெரிவுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டமானது நாட்டைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டதே தவிர நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லாது . எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றி பொதுமக்கள் ஒன்று கூடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!