பொருளாதார ஸ்திரத்தன்மையை குறைப்பதற்கான நடவடிக்கை விரைவில்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் தொகையினை குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறை ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நிய செலாவணி சரிவு மற்றும் எதிர்கால நிதித் தேவைகள் அதிகரித்து வருகின்றமை இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்து காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்று பரவலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!