முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி…..?

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதற்கான கட்டண கருவிகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் மேற்கொள்வதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகளின் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. 

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை தெரிவித்தார். 

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதற்கான கட்டண கருவிகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் தீர்மானிப்பதனை, அரசாங்கம் தலையீடு செய்து நிவர்த்திக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், முச்சக்கர வண்டிகளின் ஆரம்ப கட்டணத்தினை 80 ரூபாவிற்கும், அடுத்துவரும் தூரத்திற்கான கட்டணங்களை 50 ரூபாவாகவும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!