புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்! – ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கையில் இலட்சக்கணக்கான, டொலர்கள் மற்றும் பில்லியன் கணக்கான ரூபாவை முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களில் உள்ள பல குழுக்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயத்திற்கு பாலமாக இருந்து ஒத்துழைப்பு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.    

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!