ஜேர்மனியில் இதற்கு தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதை குறிக்கும் வகையில் ஜேர்மனியில் “Z” என்ற எழுத்தைக் பயன்படுத்தும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெர்லின் மாநிலத்தின் உள்துறை மந்திரி, ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்க Z சின்னம் பயன்படுத்தும் நபர்கள் மீது நகர அதிகாரிகள் வழக்குபதிவு செய்வார்கள் என்று கூறினார்.
    
முன்னதாக, பவேரியா மற்றும் லோயர் சாக்சோனி ஆகிய மாநிலங்களும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிப்புகளைத் வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “Z எழுத்து நிச்சயமாக தடைசெய்யப்படவில்லை, ஆனால் தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் அதன் பயன்பாடு ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்புதல் அளிக்கும்” விதமாக இருந்தால் அது குற்றமாகும் என்றார்.

மேலும் “உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் ஒரு கிரிமினல் நடவடிக்கையாகும், மேலும் இந்த ஆக்கிரமிப்புப் போரை பகிரங்கமாக அங்கீகரிக்கும் எவர் மீதும் வழக்குத் தொடர முடியும்” என்று அவர் கூறினார்.

“கூட்டாட்சி பாதுகாப்பு அதிகாரிகள் இதில் ஒரு கண் வைத்திருக்கிறார்கள், மேலும் இது ஒரு குற்றச் செயலாக இருக்குமா என்பதை பல கூட்டாட்சி மாநிலங்களும் தனிப்பட்ட வழக்குகளில் ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இசட் என்ற எழுத்து ரஷ்ய இராணுவ வாகனங்கள் போரில் பங்கேற்கும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது மற்றும் போரை ஆதரிக்கும் ரஷ்யர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இது கொடிகள் மற்றும் கிரெம்ளின் சார்பு பேரணிகளில் முக்கிய சின்னமாக பயன்படுத்தப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!