இலங்கை – ரஷ்யா இற்கு இடையிலான விமான சேவை விரைவில்……

இலங்கை மற்றும் ரஷ்யா  ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவையை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக மாற்றுக் காப்புறுதித் திட்டம் ஒன்றை  நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையினால் இயக்கப்படும் கட்டுநாயக்க – மொஸ்கோ நேரடி விமான சேவை நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களுக்கு காப்புறுதி செய்திருந்த பிரித்தானிய விமான நிறுவனமானது, ரஷ்யாவிற்கு பயணிக்கும் ஸ்ரீலங்கன் விமான காப்புறுதியை இரத்து செய்தமை  இதற்கு காரணமாக அமைந்ததுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  யுக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான யுத்தத்தினை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்

தமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு  விடயத்தினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  தமது விமான சேவையை இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட்டதொரு தீர்மானம் என வெளியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!