நுகர்வோர் விவகார அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியனவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் அமைதியின்மை தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அமைச்சு இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0711 691 691 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாரபட்சம் காணப்படுமாயின் குறித்த விடயம் தொடர்பிலும் அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!