மேலதிகமாக 2 பில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா!

இந்தியா கொழும்பிற்கு மேலதிகமாக 2 பில்லியன் டொலரை வழங்க தயாராகவுள்ளது என புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது
    
இலங்கைக்கு உணவு எரிபொருள் போன்றவற்றை வழங்கும் அதேவேளை இந்தியா 2 பில்லியன் டொலரை வழங்க தயாராகவுள்ளது என ஐந்து தரப்பினர் தெரிவித்தனர் . .

1948 சுதந்திரத்தின் பின்னர் தனது வரலாற்றில் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை கடன்களை வழங்கமுடியாத நிலையில் உள்ள அதேவேளை இந்தியா சீனா போன்ற நாடுகளிடம் கடனையும் எரிபொருள் உணவுபோன்றவற்றையும் கோரிவருகின்றது.
ஆசியாவின் பலம்வாய்ந்த நாடுகள் ஏற்கனவே பில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளன. நாங்கள் அவர்களிற்கு உதவதயாராகவுள்ளோம்,மேலதிக கடன்களை வழங்க தயாராகவுள்ளோம் என இருநாடுகளிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நன்குஅறிந்த இந்திய தரப்பொன்று தெரிவித்தது.

இலங்கை வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக செவ்வாய்கிழமை எச்சரித்துள்ளமை நிச்சயமாக கவலையளிக்கின்ற விடயம் ஆனால் எங்களால் 2 பில்லியன் டொலர்களை கடனாகவும் நாணயபரிவர்தனையாகவும் வழங்க முடியும் புதுடில்லிதரப்பொன்று தெரிவித்தது.

தென்னாசியாவை மையமாக கொண்ட ஆசியகிளியரிங் யூனியனிற்கு செலுத்தவேண்டிய 2 பில்லியன் டொலர் போன்றவற்றை பெறுவதற்கு இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது எனவும் விடயமறிந்த தரப்பொன்று தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து தரப்பினரும் விடயங்கள் குறித்து நன்கறிந்தவர்கள் அல்லது இது குறித்து விளக்கமளிக்கப்பெற்றவர்கள் ஆனால் அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிடமறுத்துவிட்டனர்.

இந்தியாவும் அதன் ரிசேர்வ் வங்கியும் இலங்கையின் வெளிவிவகார நிதியமைச்சும் இது குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கவில்லை. சீனா இலங்கைக்கு 1.3 டொலர் சி;ன்டிகேட் கடனை நீடித்துள்ளது-மேலும் கடன்களிற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

தனது தென்னிந்திய அயல்நாடு சீனா மீது தங்கியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பது குறித்து புதுடில்லி ஆர்வமாகஉள்ளது என தரப்பொன்று தெரிவித்தது. இலங்கை சீனாவிற்கு 3.5 பில்லியன் டொலர் கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது – சீனா இலங்கைக்காக துறைமுகங்கள் வீதிகளையும் உருவாக்கியுள்ளது.

நாங்கள் அவர்கள் சீனாவிடமிருந்து கடன்பெறுவதை குறைக்கவிரும்புகின்றோம்,நாங்கள் அவர்களின் நெருங்கிய சகாக்களாக மாறவிரும்புகின்றோம் என அந்த தரப்பு தெரிவித்தது.
சீனா போல இல்லாமல் – புத்தாண்டின்போது இந்திய தன்னிடம் மேலதிகமாக உள்ள சீனி அரிசி கோதுமைமா போன்றவற்றுடன் இலங்கைக்கு கப்பல்களை அனுப்பியுள்ளது.

சீனாவை விட உதவி வழங்குவதில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்பதை புதுடில்லி இலங்கைக்கு உணர்த்தியுள்ளதால் சீனாவை நம்பியிருப்பதை இலங்கை தவிர்க்கவேண்டும் என்ற நிபந்தனையை உதவி வழங்குவதற்காக இந்தியா உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை என விடயமறிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!