ரஷ்யாவை கதிகலங்க வைத்த உக்ரைன்!

கருங்கடல் பகுதியில் நின்ற ரஷ்ய கடற்படையின் மிகப்பயங்கரமான ஏவுகணை கப்பலான மாஸ்க்வா-வை நெப்டியூன் எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா ஓன்றரை மாதங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இருநாட்டு ராணுவ படைகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர்.
    
உக்ரைனின் பலப் பகுதிகளை கைப்பற்றி இருந்த ரஷ்ய ராணுவம் உக்ரைன் ராணுவத்தின் எதிர் தடுப்பு தாக்குதலை சமாளிக்க முடியாமல் கிழக்கு நோக்கி பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கருக்கடல் பகுதியின் மிகப்பயங்கரமான போர் கப்பலாக கருதப்பட்ட ரஷ்யாவின் மாஸ்க்வா போர்க்கப்பலை உக்ரைனிய தடுப்பு காவல் படையினரால் தாக்கி அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றனர்.

இதனை உக்ரைனின் ஒடெசா பிராந்திய நிர்வாகி மாக்சிம் மார்ச்சென்கோ, உறுதிப்படுத்தியுள்ளார், அதில் ரஷ்யாவின் கடற்படை ஏவுகணை கப்பலான மாஸ்க்வா உக்ரைன் ராணுவத்தின் 2 நெப்டியூன் எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், ஏவுகணை கப்பல் (Moskva) மாஸ்க்வா-வில் இருந்த வெடிமருந்து வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தினால் கப்பல் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும், அதிலிருந்த அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!