சவாலை எதிர்கொள்ள ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்களை  தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சவால்  நிறைந்த   சூழ்நிலையில் புதிய அபிலாஷைகளுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் விடியலை வரவேற்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி   விடுத்துள்ள  வாழ்த்துச் செய்தியில்   இதனை  குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில்  இலங்கையர்கள் அனைவரும்  ஒற்றுமையுடன் சவாலை முறியடிக்க  செயற்பட வேண்டும் எனவும்  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிதாக பிறக்கும் புத்தாண்டில்   நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என  பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ   தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு  பிரதமர்  விடுத்துள்ள  வாழ்த்துச் செய்தியில் பிரதமர்  இதனை  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்–சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்து  கொள்வதில்  மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும்   தமிழ்–சிங்கள புத்தாண்டானது   அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு   அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சவால் மிகுந்த காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக   அனைவரும்  எதிர்நோக்கியுள்ள துன்பங்களை க இல்லாதொழிப்பதற்கு தேவையான எதிர்கால திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும்   வாழ்த்துச் செய்தியில்  பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்   நாட்டு மக்களுக்கு   புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்திப்பதாகவும்  பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த புத்தாண்டில் நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது,

இதன் மூலம் அமைதியாகவும் நிம்மதியாகவும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இளம் தலைமுறையினர் தமது கனவினை நனவாக்கும் நோக்கில் வீதியில் இறங்கி போராடி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்,

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!