காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துவோர், நாடாளுமன்றுக்கும் வரலாம்- ரணில் எச்சரிக்கை

புதிய அமைச்சவையில் நான்கு அமைச்சர்கள் இன்று நாடாளுமன்றுக்கு வரவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதிக்கு 20வது அரசியலமைப்பின்படி செயற்படமுடியாது அவர், 19 வது திருத்தத்தின் கீழேயே அவர் பதவியில் அமர்த்தப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

எனவே 19வது அரசியமைப்பு திருத்தத்தி்ல் கீழ் செயற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் மத்திய வங்கி நாணய அச்சிடும் முறையை நிறுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வுக்காணப்படவேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்துவோர் நாடாளுமன்றத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவர் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் அரசியலமப்பின் மூலம் தீர்வுக்காணப்படவேண்டும் என்று கோருகின்றனர்.

அதற்கு செவிமடுக்கப்படவேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!