மின்தடை காலம் அதிகரிக்கப்படுமா?

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில்  270 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யப்படும் தொகுதியில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை  தெரிவித்துள்ளது.

இந்த  தொழிநுட்ப பிரச்சினையை சரி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த  சீர்செய்யும் பணி 5 நாட்களுக்குள்  நிறைவடைந்து  விடும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனல் மின் உற்பத்திகளை பயன்படுத்துவதன் மூலம்  மின் விநியோகத் தடை ஏற்படுத்தும் காலத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!