மீண்டும் தெரிவான பிரதி சபாநாயகர் மீண்டும் பதவி விலகினார்!

நேற்றுமுன் தினம் பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலகியுள்ளார்.
    
அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்திருந்தார்.

பின்னர், நேற்றுமுன் தினம் பாராளுமன்றில் புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில் அதில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
      

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!