
நேற்று (11) இடம்பெற்ற சுயாதீன குழுவினரின் கூட்டத்தில் சுயாதீன குழுவினால் பிரதமர் பதவிக்காக சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை பிரதமர் பதவிக்காக ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!