ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி காலமானார்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (sheikh khalifa bin zayed al nahyan) மே 13 வெள்ளிக்கிழமை காலமானதாக ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (sheikh khalifa bin zayed al nahyan) தனது 73ஆவது வயதில் காலமானதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (sheikh khalifa bin zayed al nahyan) நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!