நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே செயற்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்களே எடுப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதேவேளை பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து (EXIM Bank) 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்று கொள்ளவுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான யோசனைக்கு நேற்று கூடிய புதிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!