யாழ்ப்பாணத்தில் 19 நாட்களில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்! May 26, 2022 7:57 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான 19 நாட்களில் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் ஒக்டேன்- 92 பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும், மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை. அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய் விநியோகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.அத்துடன் பெற்றோல் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…