அரசியலமைப்புத்திருத்தச் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: டலஸ்

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் செய்தியொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
21ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது முக்கியம்

பொதுமக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவும், பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் 21ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது முக்கியமானதாகும்.
தனிநபர்களை இலக்காகக் கொண்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டை பின்னோக்கித் தள்ளிவிட்டுள்ளன.

எனவே அவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் கடந்த காலத்திலிருந்து சிறந்த முறையில் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும் 21ம் திருத்தச் சட்டம் பேருதவியாக இருக்கும் என்றும் டலஸ் அலஹப்பெரும தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!