அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்கே தெரியாது: குழப்பத்தில் பசில்

முடிவு இல்லை
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை ஆதரிப்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் முடிவெடுக்கவில்லை.

எனினும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் குழு, 21வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

20 சரியானது
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஏற்படுத்திய ஸ்திரமின்மை காரணமாகவே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க தகுதியற்ற சட்டத்தை அவர்கள் ஏற்கனவே எதிர்த்துள்ளனர்.

இந்தநிலையில் அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்திற்கு கட்சிக்குள் உள்ள மற்றும் ஒரு குழு ஆதரவளிக்கிறது.

தமது கட்சியின் நிலைப்பாடு தனக்கே தெரியாது
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் ஊடகம் ஒன்று வினவியுள்ளது.

இதன்போது பதிலளித்த அவர், 21வது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். 

அந்தக் கேள்வியை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே கேட்க வேண்டும்.

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தமக்கு தெரியவில்லை. ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!