ஈடுகொடுக்க முடியவில்லை: பின்வாங்கும் உக்ரைன்!

உயர்மட்ட பிராந்திய அதிகாரியின் கட்டளையை அடுத்து, உக்ரேனியப் படைகள் Severodonetsk பகுதியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரமான Severodonetsk ரஷ்ய துருப்புகளால் கடுமையான தாக்குதல்களுக்கு வாரங்களாக இலக்காகி வந்தது. மட்டுமின்றி அப்பகுதி மொத்தமும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா கடுமையாக முயற்சி மேற்கொண்டது.
    
உக்ரைன் துருப்புகள் தகுந்த பதிலடி அளித்து வந்தாலும், ரஷ்ய மொழி பேசும் Luhansk பகுதியானது விளாடிமிர் புடினின் முக்கிய இலக்காகவும் கூறப்பட்டது. மட்டுமின்றி, 2014ல் இருந்தே இந்த பிராந்தியத்தை ரஷ்யா குறிவைத்தே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், டான்பாஸில் ரஷ்ய மொழி பேசுபவர்கள் இனப்படுகொலைக்கு இலக்காவதாக ரஷ்ய ஜனாதிபதி கூறியது, உக்ரைன் மீதான அவரது படையெடுப்பை நியாயப்படுத்தியதாகவே கூறப்படுகிறது.

ஆனால், உக்ரைன் மக்களை வெடிகுண்டுகளாலும் பீரங்கிகளாலும் தாக்கி ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் தான் தங்களால் ரஷ்ய தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என தெரிவித்து Severodonetsk பகுதியில் இருந்து வெளியேறுவதாக உக்ரைன் துருப்புகள் அறிவித்துள்ளன.

Severodonetsk பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தற்போதும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பலர் Azot ரசாயன தொழுற்சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!