நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுபாடு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாக, மின் நிலைய உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலக்கரி கையிருப்பு இன்னும் 80 நாட்களுக்கு மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனல்மின் நிலையத்தின் மூன்று மின் ஆலைகளை இயக்குவதன் மூலம் 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதில் 810 மெகாவோட் மின்சாரம் தேசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் 90 மெகாவோட் மின்சாரம் மின் உற்பத்தி நிலையத்தின் தேவைகளுக்காக பன்படுத்தப்படுகின்றது.

இயந்திரங்களை பழுதுபார்த்தல்


இயந்திரங்கள் பழுதுபார்க்கப்படுவதனால் தேசிய ரீதியில் வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு 270 மெகாவோட்களினால் தற்பொழுது குறைவடைந்துள்ளது.

ஒரு இயந்திரம் பழுதுபார்க்கப்பட்டாலும் மற்றுமொரு இயந்திரத்தை பழுதுபார்ப்பதற்கு 75 நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இயந்திரங்களை பழுதுபார்க்க வேண்டியிருப்பதனால் குறைந்தளவில் நிலக்கரி கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி தட்டுபாடு

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழு வீச்சில் இயந்திரங்கள் இயங்கும். இதன்போது கூடுதல் அளவில் நிலக்கரி தேவைப்படும் எனவும் அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!