கோப் குழு கூட்டம் இடம்பெறாது – நாடாளுமன்ற ஊடக அறிக்கை ..!

கோப் குழுவின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையங்கள் நிறூவனம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்களை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எரிபொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக கோப் குழுவை இன்றைய தினம் கூட்டாதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சரித ஹேரத் அறிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் தற்போதைய நிலைமை சுமூகமடைந்ததன் பின்னர் கோப் குழு மீண்டும் கூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!