பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்குள் முறையாக டீசல் கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின்பிரதிப் பொது முகாமையாளர் திரு.பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே போதிய எரிபொருள் இன்மையால் இன்று பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உரியமுறையில் எரிபொருள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் நாளை அதிகளவான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் .கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

அத்துடன் உரியமுறையில் டீசல் விநியோகிக்கப்படும் பட்சத்தில் பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்று இரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவைற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் செய்தி பிரிவுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!