அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: 6000 பேர் வெளியேற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 6000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டு பகுதியில் பற்றிய தீ மிகப் பயங்கரமான காட்டுத்தீ மாறி, சுமார் 14,200 ஏக்கர் நிலங்களை முற்றிலுமாக தீயிற்கு இரையாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
    
மேலும் ஓக் காட்டுப்பகுதியில் பரவும் தீயிணை அணைப்பதற்கு 3000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 17 ஹெலிகாப்டர்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டும், இதுவரை 16 சதவிகிதம் தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாள்களாக தொடர்ந்து வரும் இந்த காட்டுத்தீ விபத்தின் காரணமாக கலிபோர்னியா பகுதியில் காற்றின் ஈரப்பதம் பெருமளவு குறைந்ததுடன், மாரிபோசா நகரின் சாரசரி வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளை சுற்றியுள்ள மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், இதுவரை சுமார் 6000 பொதுமக்களை கலிபோர்னியா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!