காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்களின் அறிவிப்பு

போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், போராட்டக்களத்திலிருந்து வெளியேறினாலும் கூட எமது போராட்டம் நீடிக்கும். நாங்கள் அரைவாசி வெற்றியை அடைந்தாலும் கூட இன்னும் வெற்றிகளை காண வேண்டியுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

தயவு செய்து அவசரகால சட்டத்தை நீக்க வேண்டும், எமது போராட்டக்கள சகோதரர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்த போராட்டக்களத்திலிருந்து நாம் வெளியேறினாலும் கூட நாட்டிற்காக நாம் மீண்டும் எழுவோம். அத்துடன் புதிய பாதையில் நாம் பயணத்தை தொடரவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார இது தொடர்பில் நேற்றைய தினம் டுவிட்டர் பதிவில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தை புதிய பரிமாணத்திற் கொண்டு செல்லும் நோக்குடன், 2022 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியதுடன் அதுபற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளத
போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்தில் மேலும் பலம் பொருந்தியதாக முழு இலங்கையர்களையும் ஒன்றுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!