நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் செல்லுப்படியாகுமா: எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

52 நாட்கள் சூழ்ச்சியின் போது ஏற்பட்ட சொத்து அழிவுகள், தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் சம்பந்தமாக கேள்வி எழுப்பும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் பற்றி கூறி நாட்டை தவறாக வழிநடத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின்
அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைகள் கிடைக்கின்றன. நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் செல்லாது என நேற்றைய தினம் கூறப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டத்தின் செல்லுப்படி தன்மை மற்றும் குற்றவியல் தண்டனை சடடத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி தெளிவுப்படுத்துமாறு சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
.
நாடாளுமன்ற அவைக்குள் கொலை செய்ய முடியுமா?

“ அப்படியானால், கொலை, தாக்குதல்,கொள்ளையடிப்பு என்பவற்றை நாடாளுமன்ற அவைக்குள் செய்ய முடியுமா?. நாட்டுக்குள் இருக்கும் ஒரு மக்கள் கூட்டம் 225 பேர் பொது மக்களை விட உச்சத்தில் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

இந்த 225 பேருக்கு விசேடமான சட்ட கட்டமைப்பு உள்ளது. நேற்றைய தினம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ், 52 சாட்கள் சூழ்ச்சியின் போது நடந்த சொத்து அழிவுகள் பற்றி கேள்வி கேட்ட போது, இது பொது சொத்துக்கள் சட்டத்திற்குள் வராது என அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார்.

நாட்டுக்கு தவறான செய்தி வழங்கப்படுகிறது

இதன் மூலம் தவறான செய்தி நாட்டுக்கு வழங்கப்படும். நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டம், நாட்டு மக்களுக்கு ஒரு சட்டம் என்ற தவறான செய்தி வழங்கப்படும்.இந்த அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனை சட்டம் செல்லுமா என்பதே எனது கேள்வி” என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!