
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் புதிய அரசாங்கம் ஈடுபடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த தாக்குதலின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை கண்டறிவதற்காக தற்போதைய ஜனாதிபதி முயலவேண்டும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்வதற்கு முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை தடுத்தவர்களை தண்டிக்கவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!