சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா

சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் சிறிலங்கா பிரதமர் செயலகம், இறுதிக்கட்ட பேச்சுக்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!