22 ஆம் திருத்தச் சட்டத்திற்கெதிராக உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 9 மனுக்கள் இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் வைத்தியர் குணதாச அமரசேகர, சட்டத்தரணிகளான நாகாநந்த கொடித்துவக்கு மற்றும் சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ உள்ளிட்ட 9 பேர் இந்த விசேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனுக்கள் சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!