பிரித்தானியாவில் ரோலர் கோஸ்டரில் சிக்கிக்கொண்ட மகள்: தந்தையின் துணிகர செயல்!

மெர்சிசைட்டில் உள்ள ப்ளேஷர்லேண்டி பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் ஒன்று பாதியில் பழுதடைந்து 20 அடி உயரத்தில் நின்றதையடுத்து, குழந்தையின் பெற்றோர் ஒருவர் அதில் ஏறிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் சவுத்போர்ட்டில் உள்ள ப்ளேஷர்லேண்டி பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் ஒன்று பழுதடைந்து, குறைந்தது 90 நிமிடங்கள் 20 அடி உயரத்தில் காற்றில் நிறுத்தப்பட்டது. அப்போது தொங்கியபடி குழந்தைகள் அலறும் சத்தம் போட்டு கதறியது, அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

மேலும் ரோலர் கோஸ்டரில் சென்ற பெண் குழந்தை ஒன்று மயங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து, அவளது தந்தை ரோலர் கோஸ்டர் மீது ஏறிச் சென்று மகளுடன் இறுக பற்றிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ப்ளேஷர்லேண்டிற்கான பராமரிப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 22 பேர் கொண்ட சவாரியில் சிக்கியிருந்த 19 பேரை செர்ரி பிக்கர் மூலம் மீட்டனர்.
இவற்றில் தலையில் காயமடைந்த ஒற்றை குழந்தை மட்டும் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.அத்துடன் மீட்கப்பட்ட பயணிகளில், 17 பேருக்கு மருத்துவ உதவியாளர்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்தனர்.

இதையடுத்து Pleasureland சவாரி தனிமைப்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் முழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என Merseyside Fire and Rescue தெரிவித்துள்ளது.ப்ளேஷர்லேண்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலில், நேற்று எங்கள் கோஸ்டரில் பயணிகளுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.எங்கள் உடனடி முன்னுரிமை அனைவரும் சவாரியிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படுவதைக் கவனிப்பதாகும்.

மேலும் நேற்று காலை பூங்காவின் ராக்கெட் கோஸ்டரில் நிறுத்தப்பட்ட வண்டிகள் குறித்து மூத்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் இன்று முழுமையான விசாரணையைத் தொடர்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.