கருத்து தெரிவிக்க மறுத்த மகிந்த – அவசரமாக வெளியேறியமையால் குழப்பம்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை தவிர்த்துவிட்டு அவசரமாக வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒன்றாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.

ஊடகங்களை தவிர்த்த மகிந்த

இதன் போது ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம் கேள்வி கேட்பதற்காக சென்ற போது பின்னாடி கேளுங்கள் என சைகை காட்டியுள்ளனர்.

அவரை தொடர்ந்து சென்ற ஊடகவியலாளர் வரவு செலவு திட்டம் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சி தலைவரிடம் கேளுங்கள் என கூறிவிட்டு மகிந்த அவசரமாக வெளியேறியுள்ளார்.

தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மகிந்தவின் செயற்பாடு அவர் பதற்றமான நிலையில் உள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!