நாடாளுமன்றம் 42 பிரிவுகளாக பிளவடைந்துள்ளது: வஜிர அபேகுணவர்தன தகவல்

நாடாளுமன்றம் 42 பிரிவுகளாக பிளவடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு முயற்சித்து வரும் நிலையில் நாடாளுமன்றில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஜனநாயகம் பற்றி பேசினாலும் அதனை உருவாக்குவது மிகவும் கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் 20 கட்சிகள் இருந்தாலும் அதில் 42 பிரிவுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் மக்கள் எரிபொருள், எரிவாயு வரிசைகளில் காத்திருந்தனர் எனவும், தற்பொழுது கூடுதல் விலைக்கேனும் அவற்றை பெற்றுக்கொள்ள முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டி.எஸ்.சேனநாயக்க பெரும்பான்மை பலமின்றி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார் எனவும், தற்பொழுது பெரும்பான்மை பலத்துடன் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வஜிர அபேகுணவர்தன தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!