இந்திய மீனவர்கள் 6 பேரும் விடுதலை!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    
மன்னார் நீதிவான் முன்னிலையில் மீனவர்கள் 6 பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய துணைத் தூதரகத்தின் உதவியுடன் மிரிஹான முகாமிற்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து தமிழகத்திற்கு மீனவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!