மீறல்களில் ஈடுபட்டது இலங்கை – நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!

இலங்கை ,சிரியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்த தனது தீர்ப்பில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ,அரசாங்கம் தனது செயற்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகளினால் வாழ்வதற்கான உரிமை கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமை ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!