இந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னான்டோ

இந்தியாவுக்கான புதிய தூதுவர் பதவிக்கு ஒஸ்ரின் பெர்னான்டோவின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவிக்கு என்.எம்.ஏ.குணசேகவும், தென்னாபிரிக்காவுக்கான தூதுவர் பதவிக்கு அனுருத்த குமார மல்லிகாராச்சியும் சிறிலங்கா அதிபரால் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இவர்களின் நியமனத்தை, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றும் சித்ராங்கனி வகீஸ்வராவுக்குப் பதிலாகவே, ஒஸ்ரின் பெர்னான்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலராக இருந்த ஒஸ்ரின் பெர்னான்டோ அண்மையில் அந்தப் பணியில் இருந்து விலகியிருந்தார்.

இவரது முறைப்படியான நியமனம் எப்போது ஆரம்பிக்கும் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!