போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் அதிபர் புடின்!

ரஷ்யா அதிபர் புடின்(Vladimir Putin) உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல் தெரிவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டகான் (Recep Tayyip Erdogan), புடின் (Vladimir Putin)உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வழி தேடுவதாக தான் நம்புவதாகவும், முக்கிய அடி ஒன்றை அவர் எடுத்துவைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 தான் சமீபத்தில் புடினுடன்(Vladimir Putin) நடத்திய பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர் உக்ரைன் போரை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக தெரிகிறது என எர்டகான் (Recep Tayyip Erdogan) கூறியுள்ளார்.

ரஷ்யப் படைகளிடம் இழந்த சில பகுதிகளை உக்ரைன் இம்மாதம் மீட்டது.
இந்நிலையில், ரஷ்யா சில சிக்கலகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள எர்டகான், தான் புடினுடன்(Vladimir Putin) மிக நீண்ட விவாதங்களை மேற்கொண்டதாகவும், அதிலிருந்து புடின் சீக்கிரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர விருப்பம் காட்டுவது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது எர்டகான் (Recep Tayyip Erdogan) தொடர்ந்து போரில் மத்தியஸ்தம் செய்ய முயன்று வந்துள்ளார். அத்துடன், உக்ரைனில் சிக்கியிருந்த உணவு தானியங்களின் ஏற்றுமதி மீண்டும் துவங்குவதற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவியாக எர்டகான் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!