அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 18ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த மனுக்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம்

ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணதிலக்க உட்பட 19 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்தனர்.

தற்பொழுது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

அடிப்படை உரிமை மனு 

இந்நிலையில், வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 18ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!