நாட்டை சீரழித்த கோட்டாபய-விஜித் விஜயமுனி சொய்சா

அரசியல் தலைமைத்துவம் இல்லாததன் காரணமாகவே நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல முடியாமல் போனது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போராட்டத்தில் நாங்கள் இருக்கவில்லை என்றாலும், வெளியில் இருந்து ஆதரவு வழங்கினோம். எனினும் போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல முடியாமல் போனது. அங்கு அரசியல் தலைமைத்துவம் இருக்கவில்லை என்பதே இதற்கு காரணம்.

போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை பிடித்தனர். இருப்பதற்கு எண்ணும் நாட்டை உருவாக்க வந்த கோட்டாபயவுக்கு செல்வதற்கு நாடு ஒன்றை தேடிக்கொள்ள முடியாமல் போனது. இறுதியில் அங்குமிங்கும் இருந்து விட்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார்.
ராஜபக்சவினரின் ஆவிகள் இன்னும் பயமுறுத்துகின்றன

அரசியலை மோசமாக சீரழித்த மனிதன். நாட்டையும் சீரழித்து எம்மையும் சீரழித்தார்.பௌத்த சாசனத்தையும் சீரழித்தார். அரசியலையும் நாடாளுமன்றத்தையும் மதிப்பிழக்க செய்தார். நாம் இன்னும் சிறிய அச்சத்தையும் பயத்தையும் உணர்கின்றோம்

ராஜபக்சவினரின் ஆவிகள் இன்னும் பயமுறுத்துவதே இதற்கு காரணம். நான் அப்பச்சி இறந்து போனார் என்று கூறினாலும் சவப்பெட்டிக்கு ஆணிகளை அடிக்க முடியாமல் போனது. சவப்பெட்டிக்கு ஆணியை அடிக்கவும் முடியவில்லை, அதனை அடக்கம் செய்யவும் முடியாமல் போனது எனவும் விஜித் விஜயமுனி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!