அரச குடும்ப புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் தகவல்!

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருடன் இணைந்து வெளியிடப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸின் புகைப்படம் அரச குடும்பத்தின் “உயிர்வாழும் அறிக்கை” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக வருகை தந்து இருந்த உலக தலைவர்களுக்கு வரவேற்பு வழங்கும் விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வரவேற்பு விழாவிற்கு முன்னதாக மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி மற்றும் குயின் கான்செர்ட் கமீலா, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் இணைந்து, முதல் அதிகாரப்பூர்வ அரச குடும்ப புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த புகைப்படம் வார இறுதியில் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், இந்த புகைப்படத்தின் மூலம் அரச குடும்பத்தின் “உயிர்வாழும் அறிக்கை” ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என உடல் மொழி நிபுணர் ஜூடி ஜேம்ஸின் தெரிவித்துள்ளார்.

ஜூடி ஜேம்ஸ் கூற்றுப்படி, இந்த புகைப்படம் தற்போதைய அரச குடும்பத்தின் வாரிசு வரிசை தொடர்ச்சியை வெளிப்படுத்தும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

இது தொடர்பாக அவர் மிரர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள கருத்தில், எந்த பழங்குடியினரும் அல்லது அரச வம்சமும் ஒற்றுமை, தொடர்ச்சி, மற்றும் அவற்றின் பலத்தினை அவர்களது தலைவர்கள் இறந்தவுடன் வெளிப்படுத்தும்.

அதுபோலவே தற்போது வெளியிடப்பட்ட புகைப்படம் ராணியின் மரணத்திற்கு பிறகு, அதன் அரச தொடர்ச்சி மற்றும் ஒற்றுமையின் பலத்தை காட்டும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு சற்றுப் பின்னால் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் நிற்பது, மன்னரின் பின்னால் உறுதுணையாக நிற்பதையும், ஒற்றுமையையும் காட்டுகிறது.

வில்லியம் தனது உடல் பகுதியின் முன் கைகளைப் பற்றிக் கொண்ட நிலையில், அவரது தந்தையிடம் கடமையான அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறார் எனவும், அதே நேரத்தில் கேத்ரின் தனது கணவரின் முதுகில் ஒரு கையை பக்கபலமாக வைத்துள்ளார் என ஜூடி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!