கனடாவில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்!

கனடாவில் கடன் அட்டை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் கட்டணம் ஒன்றை மேலதிகமாக செலுத்த நேரிட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தங்களது கடன் அட்டை கட்டணத்தை வாடிக்கையாளர் மீது சுமத்த சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீசா மற்றும் மாஸ்டர் கார்ட் (Visa and Mastercard) நிறுவனங்கள் தொடர்பு பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண தொகையானது ஒரு விதத்தில் இருந்து மூன்று வீதமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த காலங்களில் கடன் அட்டை நிறுவனங்கள் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதனை மட்டுப்படுத்தி இருந்தது.

எனினும் வழக்கு தீர்ப்பிற்காக இன்றைய தினம் முதல் வர்த்தக நிறுவனங்கள் தமக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், அனேகமான நிறுவனங்கள் குறிப்பாக ரெஸ்டாரன்ட்கள் மற்றும் சில்லறை வியாபாரங்கள் வாடிக்கையாளர்கள் மீது மேலதிக கட்டணத்தை சுமத்துவதற்கு விரும்பவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

நாட்டில் நிலவி வரும் பண வீக்க பிரச்சனை மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடன் அட்டை கட்டணங்களை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தி அவர்களை மேலும் அசவுகரியத்துக்கு உள்ளாக்க நிறுவனங்கள் விரும்பவில்லை என சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் கடன் அட்டை நிறுவனங்களினால் வர்த்தக நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் கடன் அட்டை கட்டணங்களை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!