சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி!

WellChild விருது விழாவின் வெற்றியாளர்களுடன் வீடியோ அழைப்பில் பேசிய இளவரசர் ஹரி, தனது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்த தகவலை வழங்கியுளார். WellChild என்ற நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேசிய தொண்டு நிறுவனம், கடந்த மாதம் லண்டனில் விருது விழா ஒன்றை நடத்தியது. அதில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் பிரித்தானிய மகாராணியின் திடீர் மறைவால், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஜோடி இந்த விருது விழாவில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் பரிசு வென்றவர்களை சந்திப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இளவரசர் ஹரி, பரிசு வென்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் இணைந்து அரட்டையடித்தார்.

அப்போது விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு இளவரசர் ஹரி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார், அத்துடன் அவர்களுக்கு விருதுகள் கிடைத்ததற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த வீடியோ அழைப்பின் போது கடுமையான உடல் நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் நான்கு வயது ஹென்றி வெய்ன்ஸுடன் பேசிய இளவரசர் ஹரி, விருது வழங்க முடியாமல் போனதற்காக அந்த இளைஞரிடம் மன்னிப்பு கோரினார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த அந்த சிறுவனும், அது பரவாயில்லை என்று தெரிவித்தான்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய இளவரசர் ஹரி, “உண்மையில் நீங்கள் எனது மகன் ஆர்ச்சியை போலவே இருக்கிறீர்கள், அதே சிறிய கீச்சு குரல், அதை நான் விரும்புகிறேன்“ என தெரிவித்தார்.
சிறுவன் ஹென்றி உடனடியாக இளவரசரின் குழந்தைகளான ஆர்ச்சி (3) மற்றும் லிலிபெட்(1) ஆகியோரை பற்றி கேட்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்.

இளவரசர் ஹரியும் அதற்கு அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள், “ஆர்ச்சி மிகவும் பிஸியாக இருக்கிறார், லில்லி தனது குரலைப் பயன்படுத்த கற்றுக் கொள்கிறார், இது சிறந்தது!” எனத் சிறுவனின் கேள்விக்கு பதிலளித்தார். அழைப்பில் மற்றொரு அரிதான மூளை நோய்த்தொற்றில் இருந்து தப்பிய 10 வயது ஷகீரா க்ரோதருடன் ஹாரி அரட்டையடித்தார், அப்போது அவளுடன் சில சைகை மொழியை பயன்படுத்தி பேச முயற்சித்தார்.

2007 ஆம் ஆண்டு முதல், கடுமையாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேசிய தொண்டு நிறுவனமான WellChild இன் புரவலராக ஹரி இருந்து வருகிறார், பிரித்தானியாவில் பணிபுரியும் அரச பதவியில் இருந்து விலகிய போதிலும் இளவரசர் ஹரி நிறுவனத்துடன் தொடர்ந்து தனது உறவைப் பேணி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!