ஆதிவாசிகளின் தலைவருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலா எத்தேவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவுறுத்தலை பதுளை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல, மஹியங்கன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கியுள்ளார்.

தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக வன்னிலா எத்தோ அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த குற்றச்சாட்டுக்கு அமைய ஆதிவாசிகளின் தலைவருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவ செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து எழுத்து மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!