கடலட்டை பண்ணைகளால் வெளியேறும் நிலையில் மீனவர்கள்!

அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பகுதியில் இருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனை தடுத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்களால் இந்த முறைப்பாடு இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பருத்தித்தீவு அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள் நிறைந்த மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசங்களாகவும் காணப்படுவதோடு, இப்பிரதேச மீன் பிடியாளர்களாகிய நாங்கள் இச் செயற்பாட்டினால் இப்பிரதேசத்திலிருந்து வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் எந்தவித விஞ்ஞான ஆய்வுகளும் அனுமதிகளுமின்றி கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.வளர்ப்புத் திட்டத்தை யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் நெக்ரா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு நிருபறாஜ் அவர்கள் சட்டவிரோத கடலட்டை அகற்றுமாறு தங்களுடாக வேண்டி நிற்கின்றோம்.

மேலும் இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால் சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்படும்.எனவே இப்பிரதேசத்தில் வாழ்ந்து வாழ்வாதாரமாக கடற்தொழில் புரிந்து வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையைப் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது இதேவேளை குறித்த முறைப்பாடு மனித உருமை ஆடைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!