இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கு நேற்று(17.10.2022) வருகை தந்துள்ள அவர், நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

டொனால்ட் லூ,இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க –இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து விவாதிப்பதற்காக டொனால்ட் லு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் மூத்த அதிகாரிகளை உதவிச் செயலாளர் லு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிராந்திய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் பதிலளிக்கக்கூடிய, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய நிர்வாகம் குறித்தும் அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!