வங்குரோத்து நிலைக்குள் தள்ளியவர்களை அம்பலப்படுத்துங்கள்!

ராஜபக்ஷ அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினர் மேற்கொண்ட முட்டாள் தனமான தீர்மானங்கள் காரணமாகவே நாடு இன்று பாரியதொரு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. நாடு வங்குரோத்து அடைந்து விட்டது. நாட்டு மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். இருப்பினும் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தியவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி திரிகிறார்கள்.
    
இந்நிலையில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வரிகளை உயர்த்தாவிடின் மீண்டும் வரிசை யுகம் உருவாகும். நாட்டின் வருமானத்தை அதிகாரிக்காமல் பொருளதாராத்தை பலப்படுத்த முடியாது எனும் கூறும் ஜனாதிபதி கடந்த காலங்களில் வரி தொடர்பில் தீர்மானங்களை எடுத்தவர்கள் மூலம் கொள்ளையிடப்பட்ட வரிப்பணத்தை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது,

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாகவே நாடு இன்று பாரியதொரு பொருளாதார நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் வரி அறவீட்டு முறைமையை நடைமுறை படுத்தாவிட்டால் சர்வதேச அமைப்புகளுடைய உதவிகளை இழக்க நேரிடும். வரிகளை உயர்த்தி நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்படும் மேலும் வருமானம் குறைந்ததால் தான் கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது அதன் காரணமாக பணவீக்கம் 75 வீதம் அதிகரித்து இருக்கிறது.

கடந்த அரசாங்கத்தின் வரி தொடர்பான தீர்மானங்கள் காரணமாக சுமார் 600, 700 பில்லியன் டொலர் இழக்க நேரிட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது எனும் கூறும் ஜனாதிபதி கடந்த காலங்களில் வரி தொடர்பில் தீர்மானங்களை எடுத்தவர்கள், பொருளாதாரத்தை சீரழித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டு சுகபோக வாழ்க்கை வாழும் அவர்களிடமிருந்து அரச வரிப்பணங்களை மீளவும் பெற்றுகொண்டு அதன் பின்னரே நாட்டு மக்களிடம் வரிப்பணத்தை அறவிட வேண்டும்.அதனை விடுத்து அவர்களை சுதந்திரமான வெளியில் சுற்றிவிட்டு ஒரு தரப்பினரிடம் மாத்திரம் வரிகளை அறிவிடுவது என்பது நியாயமற்றதாகும்.ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறியுமாறு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி அவர்களை அடையாளம் காணாமல் நாட்டு மக்கள் மீது வரிகளை சுமத்தப் பார்க்கிறார் எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தைரியம் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரி தொடர்பில் முட்டாள் தனமான தீர்மானங்களை மேற்கொண்டது யார் என்பதை வெளிக்கொணருங்கள். மேலும் அவர்கள் மூலம் கொள்ளையிடப்பட்ட நாட்டின் வரிப்பணத்தை மீண்டும் அரசாங்கத்தின் திறைச்சேரிக்கு கொண்டு வந்து சேருங்கள் என்று சாவல் விடுக்கிறோம் என்றார்.
      



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!